மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. மீதான வழக்கு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவு


மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. மீதான வழக்கு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்    சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Feb 2020 4:00 AM IST (Updated: 29 Feb 2020 2:20 AM IST)
t-max-icont-min-icon

மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. மீதான வழக்கை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

ஆலந்தூர், 

சென்னை கிண்டியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர், கிண்டி போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர், தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன், அவருடைய மனைவி காஞ்சனா ஆகியோர் போலி ஆவணங்கள் மூலமாக சிட்கோவுக்கு சொந்தமான 2 தொழிலாளர் குடியிருப்பை ஆக்கிரமித்து கொண்டதாக கூறி இருந்தார்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி இருவரும் சைதாப்பேட்டை பெருநகர 11-வது கோர்ட்டில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு மீண்டும் சைதாப்பேட்டை பெருநகர 11-வது கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மா.சுப்பிரமணியன், அவருடைய மனைவி ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது இந்த வழக்கை எம்.எல்.ஏ., எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மேலும் சிறப்பு கோர்ட்டில் வருகிற மார்ச் மாதம் 20-ந் தேதி இருவரும் ஆஜராகும்படியும் அவர் உத்தரவிட்டார்.

Next Story