பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு: குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டருக்கு இனிப்பு வழங்கிய விவசாயிகள்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள், கலெக்டருக்கு இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, வேளாண்மை துறை இணை இயக்குனர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் டெல்டா மாவட்டத்தை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கு விவசாயிகள் இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தனர். இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டதாவது:-
விவசாயி சரபோஜி:-நாகை தேவநதி வடிகாலில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கும் விதமாக தடுப்பணை கட்டி செல்லூர் மற்றும் பாலையூர் விவசாயிகளுக்கு பாசன வசதிக்கு தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
மணியன்:- வேதாரண்யம் ஒன்றியம் கருப்பம்புலம்-கடினல்வயல் சாலை இடையே உள்ள சாம்புலம் ஏரியை ஆழப்படுத்த வேண்டும். சாலையில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைத்து, பொதுமக்கள் குளித்திட ஏதுவாக இருபுறங்களிலும் படித்துறை அமைக்கவேண்டும்.
முஜீபுஷரீக்:- வேட்டைக்காரனிருப்பு கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வணிக வங்கி அல்லது தனியார் வங்கி என ஏதேனும் ஒன்று தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேட்டைக்காரனிருப்பு-காரப்பிடாகை தெற்கு கிராமங்களை மையமாக கொண்டு பகுதிநேர வேளாண்மை விரிவாக்க மையம் தொடங்க வேண்டும். வேட்டைக்காரனிருப்பு கிராமத்திற்கு நிரந்தர திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு கட்டித்தர வேண்டும்.
கோபி கணேசன்:- நாகை மாவட்டம் மயிலாடுதுறை வருவாய் கோட்டம் பகுதியில் வேளாண் கல்லூரியை தொடங்க வேண்டும். மயிலாடுதுறையில் கலெக்டரின் அறிவிப்பின்படி உணவு பூங்கா அமைக்க வேண்டும். 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுத்தொகை மற்றும் கடந்த ஆண்டு குறுவைக்கான பயிர் காப்பீட்டுத்தொகை ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் மண்டல இணைப்பதிவாளர் நடுகாட்டு ராஜா, நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளர் சண்முகநாதன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கணேசன்:- வேளாண்மை துறை ஆத்மா திட்டத்தில் நடக்கும் ஊழல் குறைபாடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நிரந்தர நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story