வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக விவசாயிகள் புகார்
நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறப்பட்டன. அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போக புஞ்சை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. முறை வைத்து 6 முறை திறப்புக்கு பதில், 5 முறை என குறைத்துள்ளதாக தெரிகிறது. தண்ணீர் வீணாவதும், கடை மடை வரை விரைவாக வராததாலும் நீரை குறைக்காமல் திறக்க வேண்டும். மேலும் தண்ணீர் திருட்டையும் தடுக்க வேண்டும்.
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, 20 முதல், 30 சதவீதம் வரை வியாபாரிகளிடம் இருந்து நெல் வரத்தாகிறது. மேலும் பிற மாநில நெல்லும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கணபதிபாளையம் உட்பட பல நெல் கொள்முதல் நிலையங்களில், மூட்டைக்கு, ரூ.35 முதல், ரூ.40 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள். 40 கிலோவுக்கு பதிலாக 41 கிலோ எடை போடுகின்றனர். எனவே முறைகேட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உயர்மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த இடத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் குடிமராமத்துக்கு நிதி வந்ததும், குழு அமைத்து பணி செய்ய வேண்டும். கொப்பு, கிளை வாய்க்கால்களை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மஞ்சளுக்கு போதிய விலை இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் பயிரிடப்படும் பரப்பளவும், விளைச்சலும் குறைந்துள்ளது. எனவே அரசு மஞ்சளை கொள்முதல் செய்ய வேண்டும். நெல் அறுவடைக்கு ஆள் இன்றி, 20 முதல், 30 சதவீதம் நெல் வீணாகிவிட்டது. எனவே வேளாண் பொறியியல் துறை மூலம் நெல் அறுவடை எந்திரம் வாங்கி வழங்க வேண்டும்.
ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை மூலம் கரும்பு வெட்டியதற்கான தொகை, கடந்த 5 மாதங்களாக விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. மேலும் ஆலை மூலம் வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனுக்கான தொகையும் இதுவரை, வங்கியில் செலுத்தப்படவில்லை. இதனால் புதிய கடன் பெற முடியவில்லை. பணம் தர தாமதமானால் அதற்கு, வட்டி போட்டு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வேறு ஆலைக்கு கரும்பை வெட்ட அனுமதி அளிக்கவேண்டும்.
விவசாயிகளின் கருத்துக்கு பதில் அளித்து கலெக்டர் சி.கதிரவன் பேசியதாவது:-
கரும்பு வெட்டியதற்கான நிலுவை தொகையை விவசாயிகளுக்கு விரைந்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் நபார்டு, டேன்பிட் மூலம் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும். கீழ்பவானி கொப்பு, கிளை வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி 108 மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. 94 மனுக்கள் பரிசீலனை செய்து நடவடிக்கையில் உள்ளது. கொப்பு, கிளை வாய்க்கால் பிரச்சினை, ஆக்கிரமிப்பு, சீரமைப்பு பணி செய்ய வேண்டும் எனில், அந்தந்த பகுதி விவசாயிகள் மனு வழங்கலாம்.
கரும்பு விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வேளாண் பொறியியல் துறை மூலம், 3 டிராக்டர்கள், 3 ரொடோவேட்டர், 3 கரும்பு வெட்டும் எந்திரங்கள், ஒரு கரும்பு நடவு எந்திரம் வாங்கப்பட்டு உள்ளது. மேலும் நெல் அறுவடை செய்ய 2 எந்திரங்கள் வாங்கப்பட உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
அப்போது விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அரசு அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

Related Tags :
Next Story