நலவழித்துறையில் மருத்துவர்கள் நியமனம் நியாயமாக நடைபெறவில்லை துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் குற்றச்சாட்டு
புதுச்சேரி அரசு நலவழித்துறையில் மருத்துவர்கள் நியமனம் நியாயமாக நடைபெறவில்லை என்று துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நலவழித்துறையின் மூலம் நிரப்பப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் நேற்று காலை நலவழித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை சட்டசபை வளாகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசு நலவழித்துறை மூலமாக சமீபத்தில் மருத்துவர்கள் நியமனம் நடைபெற்றதாக அறிகின்றேன். சில அதிகாரிகளின் தவறான நடவடிக்கை மற்றும் வழி நடத்துதலால் இந்த நியமனம், நியாயமான முறையில் நடைபெறவில்லை என பரவலாக கருத்து நிலவுகிறது.
எனவே அரசு நலவழித்துறை மூலம் செய்யப்பட்ட இந்த மருத்துவர்கள் நியமன நடைமுறை குறித்து அனைத்து விபரங்களையும் தாங்களே விசாரித்து நியமனத்தில் விதிமீறல் இருந்தால், அது குறித்து மேல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இது சம்பந்தமாக பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்த விபரங்கள் மற்றும் தாங்கள் அதன் மீது எடுத்த நடவடிக்கைகளையும் எனக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story