குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தல்


குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Feb 2020 10:15 PM GMT (Updated: 29 Feb 2020 3:39 PM GMT)

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

வரதராஜன்பேட்டை,

ஒன்றியக்குழு கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மருதமுத்து தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குணசேகரன், துணை தலைவர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணக்கர் சிவகுருநாதன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சண்முகம் கலந்து கொண்டு பேசுகையில், விளந்தை கிராமத்திற்கு கோடைகாலம் வருவதற்கு முன்பே குடிநீர் தட்டுப்பாடை நீக்க தேவையான வசதிகளை செய்துதர வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது ஒன்றியக்குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) குருநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். அரியலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி, காவிரி பாசன டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தமைக்கும், முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்தமைக்கும் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்- அமைச்சர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அரசு தலைமை கொறடா தாமரை.ராஜேந்திரன் மற்றும் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக மேலாளர் (நிர்வாகம்) மனோகரன் நன்றி கூறினார்.

Next Story