கொடைக்கானல் நகர அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்


கொடைக்கானல் நகர அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்
x
தினத்தந்தி 1 March 2020 4:00 AM IST (Updated: 29 Feb 2020 10:30 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மூஞ்சிக்கல் பகுதியில் நடைபெற்றது.

கொடைக்கானல்,

கொடைக்கானல் நகர அ.தி.மு.க. சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மூஞ்சிக்கல் பகுதியில் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் ஜான்தாமஸ், முன்னாள் நகரசபை தலைவர் எட்வர்டு, முன்னாள் அவைத்தலைவர் வெங்கட்ராமன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பிச்சை, கூட்டுறவு நகர வங்கி தலைவர் முகமது முஸ்தபா, மாவட்ட பிரதிநிதி ஆவின்பாருக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாணவருக்கு உதவித்தொகை ஆகியவற்றை வழங்கி பேசினார். அவர் பேசும்போது, கோர்ட்டு உத்தரவுப்படி கொடைக்கானல் பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வரும் என்றார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மருதராஜ், தலைமை கழக பேச்சாளர் உமாசங்கர், ஒன்றிய செயலாளர்கள் முருகன், சண்முகசுந்தரம், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் சுதாகர் பிரபு, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அழகு வினோத், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ஜெயசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக நகர துணை செயலாளர் ஜாபர் சாதிக் வரவேற்றார். முடிவில் நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஜான்போஸ்கோ நன்றி கூறினார்.

Next Story