மாவட்ட செய்திகள்

உறவினருக்கு பெண் பார்க்க சென்றபோது பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; தி.மு.க. நிர்வாகி பலி + "||" + Pity when the relative went to see the girl: a van collision on a motorcycle; DMK The administrator kills

உறவினருக்கு பெண் பார்க்க சென்றபோது பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; தி.மு.க. நிர்வாகி பலி

உறவினருக்கு பெண் பார்க்க சென்றபோது பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; தி.மு.க. நிர்வாகி பலி
உறவினருக்கு பெண் பார்க்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் தி.மு.க. நிர்வாகி பலியானார்.
பாகூர்,

கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்புராம் (வயது 62). கடலூர் மாவட்ட தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர்.

இவர்கள் 2 பேரும் நேற்று காலை உறவினர் ஒருவருக்கு பெண் பார்க்க நல்லாத்தூரில் இருந்து மடுகரைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அழகப்பன் வண்டியை ஓட்டினார். சுப்புராம் பின்னால் அமர்ந்திருந்தார்.


வேன் மோதல்

புதுவை மாநிலம் கல்மண்டபம் அருகே சென்ற போது எதிரே வந்த வேன் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்புராம் படுகாயம் அடைந்தார். அழகப்பன் லேசான காயம் அடைந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சுப்புராம் மதகடிப்பட்டு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுப்புராம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலி
புதுச்சத்திரம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
2. பணி முடிந்து வீடு திரும்பிய போது ஸ்கூட்டர் கவிழ்ந்து செவிலியர் பலி மற்றொருவர் படுகாயம்
காவேரிப்பட்டணம் அருகே ஸ்கூட்டர் கவிழ்ந்த விபத்தில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த செவிலியர் பலியானார். அவருடன் சென்ற மற்றொரு செவிலியர் படுகாயம் அடைந்தார்.
3. தாரமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி மீன் பிடித்தபோது பரிதாபம்
தாரமங்கலம் அருகே மீன் பிடித்தபோது ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
4. சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் பலி குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்
சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் பலியானார். மேலும் குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி 14 போலீசாருக்கு தொற்று உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் ஒருவர் பலியானார். மேலும் 14 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.