3-வது மெட்ரோ ரெயில் வழித்தட பணி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் ஆய்வு
மும்பையில் செயல்படுத்தப்படும் 3-வது மெட்ரோ ரெயில் வழித்தட பணிகளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மும்பை,
மும்பை பெருநகரத்தில் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு மோனோ, மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், 3-வது மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடம் கொலபா -பாந்திரா -சீப்ஸ் இடையே 33.5 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடம் சுரங்கமார்க்கமாக அமைக்கப்பட உள்ளது.
27 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஒன்றை தவிர மற்ற 26 ரெயில் நிலையங்களும் பூமிக்கடியில் அமைய உள்ளன. இந்த திட்டத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் சுரங்கம் அமைப்பது உள்பட 59 சதவீத பணிகள் முடிந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நேற்று சகார் ரோடு மெட்ரோ ரெயில் நிலைய பகுதியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகள் தொய்வில்லாமல் நடப்பதாக உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் இந்த ஆய்வின் போது, அவரது மகனும், சுற்றுச்சூழல் மந்திரியுமான ஆதித்ய தாக்கரே உடன் இருந்தார்.
Related Tags :
Next Story