குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி லெப்பைக்குடிக்காட்டில் முஸ்லிம்கள் தொடர் முழக்க போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி லெப்பைக்குடிக்காட்டில் முஸ்லிம்கள் தொடர் முழக்க போராட்டம்.
மங்களமேடு,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு சந்தை திடலில், லெப்பைக்குடிக்காடு மக்கள் ஜனநாயக பேரவையினர் நேற்று தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அந்த பேரவையின் தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமை தாங்கினார். செயலாளர் அஸ்கர்அலி. பொருளாளர் பக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர் முழக்க போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்தக்கூடாது என்றும், தமிழக அரசு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஏராளமான முஸ்லிம்கள், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story