மாவட்டத்தில் 20 இடங்களில் அம்மா பூங்கா அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும், கிராமப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி, அவர்களுக்காக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அம்மா பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உடற்பயிற்சி செய்ய அம்மா உடற்பயிற்சிக்கூடமும், நடைபயிற்சிக்காக சித்தர்கள் காட்டிய வழியில் 8 வடிவிலான நடைபயிற்சி அமைப்பு மற்றும் பொழுது போக்கு உபகரணங்களுடன் இந்த அம்மா பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், குடிநீர், கழிவறை வசதிகள் ஆகியவை செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்பாளையம் ஊராட்சியிலும், அரவக்குறிச்சி வெஞ்சமாங்கூடலூரிலும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அம்மா பூங்காக்களை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
ரூ.6 கோடி மதிப்பீட்டில்...
கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேட்டமங்கலம், ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிகளிலும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் ஆண்டாங்கோவில் கிழக்கு, மேலப்பாளையம், பாகநத்தம், காக்காவாடி, புத்தாம்பூர் ஊராட்சிகளிலும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் வெஞ்சமாங்கூடலுர் கிழக்கு, வெஞ்சமாங்கூடலு£ர் மேற்கு ஆகிய ஊராட்சிகளிலும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் புன்னம் ஊராட்சியிலும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் வதியம் ஊராட்சியிலும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் திருக்காம்புலியூர், போத்துராவுத்தன்பட்டி ஊராட்சிகளிலும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் தோகைமலை, கூடலுர், கழுகூர் ஊராட்சிகளிலும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடவூர், பண்ணப்பட்டி, பாலவிடுதி, மஞ்சநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும் உடற்பயிற்சிகூடத்துடன் அம்மா பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அம்மா பூங்காவும், தலா ரூ.10 லட்சம் மதிப்பில் நவீன உபகரணங்களுடன் கூடிய அம்மா உடற்பயிற்சிக்கூடமும் என மொத்தம் 20 ஊராட்சிகளில் ரூ.6 கோடி மதிப்பிலான அம்மா பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கிராமப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதில் கீதா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தானேஷ் என்கிற முத்துக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story