மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது + "||" + Tourist arrivals to Okenakal declined

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
பென்னாகரம்,

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதனிடையே கர்நாடக கே.எஸ்.ஆர். அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


இதனால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,500 கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

பரிசலில் சென்றனர்

இந்நிலையில் நேற்றும் வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீரே ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டு இருந்தது. இதனிடையே வாரவிடுமுறையான நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்தனர்.

பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைப்பு
திருச்சி விமான நிலையத்தில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைக்கப்பட்டனர்.
2. கொடைக்கானலில் தங்கும் விடுதிகள் மூடல்: சாலையோரத்தில் தஞ்சம் அடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் தங்கும் விடுதிகள் மூடப்பட்டதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
3. ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
4. ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
5. வாரவிடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் தடையை மீறி அருவியில் குளித்து மகிழ்ந்தனர்
வாரவிடுமுறையையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தடையை மீறி அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.