குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதா கட்சியினர் பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதா கட்சியினர் பேரணி
x
தினத்தந்தி 2 March 2020 4:30 AM IST (Updated: 2 March 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவித்து தென்காசியில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் பேரணி நேற்று மாலையில் நடைபெற்றது.

தென்காசி,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவித்து தென்காசியில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் பேரணி நேற்று மாலையில் நடைபெற்றது.

பேரணிக்கு மாவட்ட தலைவர் ராமராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜே‌‌ஷ் ராஜா, சுப்பிரமணியன், பொருளாளர் ராமநாதன், மண்டல பார்வையாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி நகர தலைவர் குத்தாலிங்கம் வரவேற்றார். மாநில துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், சுப.நாகராஜன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், துறவியர் பேரவை மாநில அமைப்பாளர் சரவண கார்த்திக், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, வி‌‌ஷ்வ இந்து பரி‌‌ஷத் மாவட்ட தலைவர் வன்னியராஜன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். இதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Next Story