வேப்பனப்பள்ளி அருகே காட்டு யானை தாக்கி வன ஊழியர் உள்பட 2 பேர் பலி
வேப்பனப்பள்ளி அருகே காட்டு யானை தாக்கி வன ஊழியர் உள்பட 2 பேர் பலியாகினர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தமிழக, கர்நாடக மாநில எல்லையில் பூதுகுட்டா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் உள்ள தொரலக்கி என்ற வனப்பகுதியில் 35 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வந்தன.
இந்நிலையில் நேற்று இரவு 35 யானைகளை விரட்டும் பணியில் கர்நாடக வனத் துறையினர் ஈடுபட்டனர். இதையொட்டி வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளங்கள் அடித்தும் அதிக சத்தம் எழுப்பியும் யானைகளை விரட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த யானைகள் கூட்டத்தில் இருந்து ஒரு யானை மட்டும் ஆக்ரோஷமாக ஓடி வந்து வனத்துறை யினரை விரட்டியது.
2 பேர் பலி
இதனால் பயந்து போன வனத்துறையினர் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். ஆனால் விடாமல் துரத்திய யானை, பூதுகுட்டா கிராமத்தை சேர்ந்த வன ஊழியரான குத்த முனியப்பா (வயது 55) என்பவரை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் ஆக்ரோஷத்துடன் அந்த யானைகள் கூட்டம் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது தனது விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்த விவசாயி ஒருவரையும் காட்டு யானை ஒன்று துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவரும் பரிதாபமாக இறந்தார். அவர் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இந்த 35 யானைகளும் அதே பகுதியில் தான் ஆக்ரோஷத்துடன் சுற்றித் திரிகின்றன. காட்டு யானை தாக்கி வன ஊழியர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடம் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story