கர்நாடகத்தில் நானோ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகத்தில் நானோ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
பெங்களூரு,
இந்திய நானோ தொழில்நுட்பத்தின் 11-வது மாநாடு தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கர்நாடகத்தை நானோ தொழில்நுட்ப உற்பத்தி மையமாக மாற்றுவது தான் அரசின் நோக்கம். இதற்காக மத்திய அரசுடன் இணைந்து நானோ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். கர்நாடகத்தில் நானோ தொழில்நுட்பத்திற்கு வலுவான நிறுவன கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் அவற்றுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், நிறுவன வசதிகள், திறமையான மனித சக்திகளை உருவாக்கி கொடுக்க அரசு ஆர்வமாக உள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் இந்த நானோ தொழில்நுட்பத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பொது கருவிமயமாக்கல் வசதியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த துறையின் தேவையான மனிதசக்தியை பூா்த்தி செய்யும் வகையில் திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உணவு, ஆற்றல் பாதுகாப்பு, தண்ணீர் சுத்திகரிப்பு, சுகாதாரம், குப்பை கழிவு நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் புதுமையான நானோ தொழில்நுட்பம் அடிப்படையில் தீர்வை கண்டறிய வேண்டும். இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா பேசினார்.
இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேசும்போது, “கர்நாடகத்தில் நானோ தொழில்நுட்ப பூங்கா அமைப்பது குறித்து பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானியான கர்நாடக நானோ ெதாழில்நுட்ப தொலைநோக்கு குழுவின் தலைவராக இருக்கும் சி.என்.ஆர்.ராவுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். நானோ தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க பல்வேறு நானோ தொழில்நுட்ப பூங்காக்கள் பெங்களூருவில் தொடங்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கையை இயற்ற அரசு திட்டமிட்டு உள்ளது” என்றார்.

Related Tags :
Next Story