கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிக்கு 300 படுக்கை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்
நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிக்கு 300 படுக்கை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகர்கோவில்,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் ரொட்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் ரொட்டிகளை வழங்கினார். மாவட்ட பொருளாளர் கேட்சன், நாகர்கோவில் நகர செயலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் சேக்தாவூது, வக்கீல் உதயகுமார், சிவராஜன், பெஞ்சமின், அழகம்மாள்தாஸ், எம்.ஜே.ராஜன், சீதாமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
300 படுக்கை வசதிகள்
பின்னர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், நோயாளிகளிடம் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்து மற்றும் உணவு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். நோயாளிகள் அவரிடம் படுக்கை வசதிகள் குறைவாக இருப்பதாகவும், டாக்டர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதாகவும் கூறினர்.
அதன்பிறகு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆஸ்பத்திரிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இதனால் நோயாளிகள் தங்கி சிகிச்சைபெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே தமிழக அரசு இந்த ஆஸ்பத்திரிக்கு உடனடியாக 300 படுக்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
கூடுதல் நிதி
அத்தோடு தேவையான டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வசதியாக மருந்து பொருட்களுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். கூடுதலாக படுக்கை வசதிகளை ஏற்படுத்தித்தர நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story