பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 37,193 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்


பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 37,193 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 2 March 2020 11:30 PM GMT (Updated: 2 March 2020 11:08 PM GMT)

பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 37 ஆயிரத்து 193 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

தென்காசி, 

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கி, 26-ந்தேதி நிறைவு பெறுகிறது.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, வள்ளியூர் என 3 கல்வி மாவட்டங்களும், தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் என 2 கல்வி மாவட்டங்களும் உள்ளன. இந்த 5 கல்வி மாவட்டங்களில் 37 ஆயிரத்து 193 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதில், 16 ஆயிரத்து 780 பேர் மாணவர்கள், 20 ஆயிரத்து 413 பேர் மாணவிகள் ஆவார்கள்.

மாணவ-மாணவிகள் தேர்வு எழுத 135 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. தேர்வை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை நெல்லை, தென்காசி மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

Next Story