நாகர்கோவிலில் 5-ம் நாள் கண்காட்சி: புத்தகங்களால் மாற்றங்கள் உருவாகும்- சுப.உதயகுமார் பேச்சு
புத்தகங்களால் மாற்றங்கள் உருவாகும் என்று நாகர்கோவிலில் 5-ம் நாள் புத்தக கண்காட்சியில் நடந்த கருத்தரங்கில் சுப.உதயகுமார் பேசினார்.
புத்தக கண்காட்சி
மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில் புத்தக கண்காட்சி நாகர்கோவில் கோட்டார் பயோனியர் முத்து மஹாலில் நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர் சந்திப்பு, இலக்கிய உரை, பட்டிமன்றம், கவியரங்கம், உள்ளிட்டவை நடக்கின்றன. அதன்படி 5-ம் நாளான நேற்று, “வாசிக்கப்படாத வரலாறு“ என்ற தலைப்பில் இலக்கிய கருத்தரங்கம் நடைபெற்றது.
இதற்கு நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி தலைமையாசிரியர் பத்மா தலைமை தாங்கினார். எழுத்தாளர் கென்னடி வரவேற்று பேசினார்.
இந்திய வரலாறு
சிறப்பு விருந்தினராக பச்சை தமிழகம் மாநில தலைவர் சுப.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புத்தகங்களால் உலகில் பல மாற்றங்கள் உருவாகி உள்ளது. வரலாறு என்பது மறக்கக்கூடியதோ, மறைக்க கூடியதோ இல்லை. இந்திய வரலாறு பல கோணங்களில் எழுதப்பட்டு உள்ளது. மதவாத வரலாறை மக்கள் மீது திணிக்க கூடாது.
இவ்வாறு சுப.உதயகுமார் பேசினார்.
முன்னதாக கண்காட்சியில், ஆண்கள், பெண்கள் என குடும்பம், குடும்பமாக வந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story