கடற்கரை கிராமங்களில் அலைதடுப்பு சுவர் அமைக்கும் பணி: காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் பார்வையிட்டார்
கடற்கரை கிராமங்களான நீரோடி காலனி, மார்த்தாண்டன் துறை, வள்ளவிளை பகுதிகளில் தற்போது அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளை நேற்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பெரிய அளவு பாறைகளை கொண்டு தான் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று இளநிலை பொறியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் ஜூன், ஜூலை மாதங்களில் இயற்கையாகவே கடல் சீற்றம் அதிகரிக்கும். அதற்கு முன்னதாக இந்த வேலைகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதேபோல் எடப்பாடு பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு கடல் அரிப்பு ஏற்பட்டு சாலை முழுமையாக சேதமடைந்தது. அந்த சாலையையும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அப்போது நீரோடி காலனி பங்கு தந்தை டோனி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story