நெல்லை அருகே தண்டவாள பராமரிப்பு பணி: ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


நெல்லை அருகே தண்டவாள பராமரிப்பு பணி: ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 4 March 2020 4:00 AM IST (Updated: 3 March 2020 7:49 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை, 

நெல்லை அருகே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தண்டவாள பராமரிப்பு பணி 

நெல்லை அருகே கடம்பூர்–வாஞ்சி மணியாச்சி–தட்டப்பாறை, வாஞ்சி மணியாச்சி–நாரைக்கிணறு –கங்கைகொண்டான் ஆகிய பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர்–பாலக்காடு ரெயில்கள் 


திருச்செந்தூர் –தூத்துக்குடி பாசஞ்சர் ரெயில் வருகிற 11–ந்தேதி (புதன்கிழமை) மட்டும் நெல்லை –தூத்துக்குடி வரை ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடி –திருச்செந்தூர் இடையில் இருமார்க்கத்திலும் இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்கள் 12–ந்தேதி முதல் 15–ந்தேதி வரை நெல்லை –தூத்துக்குடி இடையே ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு–திருச்செந்தூர் இடையே இருமார்க்கத்திலும் இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்கள் நாளை (வியாழக்கிழமை), 6, 7, 10, 12, 13, 14–ந்தேதிகளில் கோவில்பட்டி–நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது.

இதே ரெயில்கள் இன்று (புதன்கிழமை), 8, 11, 15–ந்தேதிகளில் நெல்லை–மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இதையொட்டி திருச்செந்தூர்–பாலக்காடு பாசஞ்சர் ரெயில் மதுரையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும்.

செங்கோட்டை–மதுரை இடையில் இருமார்க்கத்திலும் இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்கள் இன்று முதல் 15–ந்தேதி வரை (வியாழக்கிழமை தவிர) விருதுநகர்–மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்–கோயம்புத்தூர் ரெயில்கள் 

நாகர்கோவில் –கோயம்புத்தூர் –நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில்கள் இன்று முதல் 15–ந்தேதி வரை திருப்பரங்குன்றம் –திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி –திருவனந்தபுரம்–திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 11–ந்தேதி முதல் 15–ந்தேதி வரை கோவில்பட்டி –திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்–தாம்பரம்–நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 11–ந்தேதி முதல் 15–ந்தேதி வரை திண்டுக்கல்–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

நெல்லை–தாதர் ரெயில் 

நெல்லை சந்திப்பு–தாதர் இடையே வாரம் மும்முறை இயக்கப்படும் சாளுக்யா எக்ஸ்பிரஸ் ரெயில் 12, 13–ந்தேதிகளில் மாலை 3 மணிக்கு பதில் 4 மணிக்கு புறப்படும்.

நெல்லை–ஈரோடு/மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் சேலம் கோட்டத்துக்கு 1 மணி நேரம் 55 நிமிடங்கள் தாமதமாக செல்லும். நெல்லை–மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில், திருச்சி கோட்டத்துக்கு குறிப்பிட்ட நாட்கள் 2.15 மணி நேரம் தாமதமாக செல்லும்.

இந்த தகவல்கள் மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story