நம்பியூர் அருகே பல்வேறு கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
நம்பியூர் அருகே உள்ள கொன்னமடையில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.
நம்பியூர்,
காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து விலகி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொண்டார்கள்.
இந்த விழாவில் எலத்தூர் பேரூர் செயலாளர் சேரன் சரவணன், அரசு வழக்கறிஞர் கங்காதரன், பிரபு, மயில்சாமி ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
முன்னதாக நம்பியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காந்திபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு உதவி தொடக்ககல்வி அதிகாரி தேவசகாயம் தலைமை தாங்கினார். நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்னுச்சாமி, நம்பியூர் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் கருப்பணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்துகொண்டு ஆண்டு விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
Related Tags :
Next Story