மேட்டுப்பாளையம் அருகே, அம்மிக்கல்லை போட்டு மூதாட்டி கொலை - கணவர் கைது


மேட்டுப்பாளையம் அருகே, அம்மிக்கல்லை போட்டு மூதாட்டி கொலை - கணவர் கைது
x
தினத்தந்தி 4 March 2020 3:45 AM IST (Updated: 3 March 2020 11:02 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் அருகே அம்மிக்கல்லை போட்டு மூதாட்டியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை காந்தி நகரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 62), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாராத்தாள் என்கிற மாரியம்மாள் (62). சாமிநாதனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

கடந்த 1-ந் தேதி சாமிநாதன் மதுகுடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த சாமிநாதன் அம்மிக்கல்லை எடுத்து மாராத்தாளின் தலையில் போட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில், படுகாயம் அடைந்த மூதாட்டியை அப்பகுதி மக்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாமிநாதனை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story