மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 March 2020 4:00 AM IST (Updated: 4 March 2020 1:12 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு மற்றும் மக்கள் சேவை நிறுவன பாதுகாப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு சீர் குலைப்பதாக கூறி, அதனை கண்டித்தும் பெரம்பலூர் மாவட்ட மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு மற்றும் மக்கள் சேவை நிறுவன பாதுகாப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கசாமி, ஹெச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னசாமி, ஏ.ஐ.டி.யு.சி. சங்க நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

Next Story