எருது விடும் விழாவில் காளையை அடக்கியதில் மோதல்; 5 பேர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை
தேன்கனிக்கோட்டை அருகே எருது விடும் விழாவில் காைளயை அடக்கியதில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை,
தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகார்ஜூனதுர்க்கம் கிராமத்தில் கடந்த 1-ந் தேதி எருது விடும் விழா நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த விழாவை காண ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் நொகனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாரசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் காளையை அடக்கினார்கள். இந்த எருது விடும் விழாவில் 2 காளைகள் ஒன்றோடு ஒன்று மோதி செத்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏணிமுச்சந்திரம் கிராமத்தில் பலியான ஒரு காளையை அடக்கம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சந்தோஷ்குமார், பிரகாஷ் ஆகிய 2 பேரும் சென்று விட்டு கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
5 பேர் மீது தாக்குதல்
அப்போது கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் அவர்களை வழிமறித்த சுரேஷ், எருது விடும் விழாவில் தனது காளையை அடக்கியது குறித்து 2 பேரிடமும் தகராறு செய்து அவர்களை கட்டையால் தாக்கினார். இது குறித்து சந்தோஷ்குமார் தனது தந்தை அனுமப்பாவிடம் கூறினார். இதைத் தொடர்ந்து அவரும், உறவினர் மாதேஷ் என்பவரும் இது குறித்து கேட்டனர்.
அப்போது சுரேஷ் தரப்பினர், அனுமப்பா, சந்தோஷ்குமார், அவர்களுடன் சென்ற பிரகாஷ், மாதேஷ் ஆகியோரை தாக்கினார்கள். இதை விலக்க சென்ற குர்ரப்பா என்பவரும் தாக்கப்பட்டார். இந்த மோதலில் காயம் அடைந்த 5 பேரும் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story