சேலத்தில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி


சேலத்தில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 3 March 2020 11:30 PM GMT (Updated: 3 March 2020 10:00 PM GMT)

சேலம் கல்வி மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

சேலம்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் மாவட்ட பிரிவு சார்பில் உலக திறனாய்வு கண்டறிதல் திட்டத்தின் கீழ் சேலம் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நேற்று காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இதில் 6, 7, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான போட்டி நடைபெற்றது.

அதன்படி நேற்று 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றன.. தொடர்ந்து நீளம், உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

விளையாட்டு போட்டி

இன்று (புதன்கிழமை) சங்ககிரி கல்வி மாவட்ட அளவிலான போட்டி நடக்கிறது. இது குறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அதிகாரி ஞானசுகந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

உலக திறனாய்வு கண்டறிதல் விளையாட்டு போட்டிகள் ஒவ்ெ்வாரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடுவார்கள் என்று கூறினார்.

Next Story