மாவட்ட செய்திகள்

புழலில் தோழி வீட்டில் நகை, பணம் திருடிய பெண் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார் + "||" + Homemade girlfriend Woman arrested for stealing jewelry and money

புழலில் தோழி வீட்டில் நகை, பணம் திருடிய பெண் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்

புழலில் தோழி வீட்டில் நகை, பணம் திருடிய பெண் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்
புழலில் தோழியின் வீட்டில் நகை, பணம் திருடிய இளம் பெண் கைது செய்யப்பட்டார். திருடிச்சென்ற பின்னர், கண்காணிப்பு கேமராவில் உருவம் பதிந்ததால் போலீசில் சிக்கினார்.
செங்குன்றம்,

சென்னை அடுத்த புழல் விநாயகபுரம் துளசி நகரைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி சரண்யா (வயது 38). இவர் கொளத்தூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார்.


புழல் புத்தகரம் ரேவதி நகரை சேர்ந்தவர் சங்கீதா (39). இவர் சரண்யாவின் நெருங்கிய தோழி ஆவார். இந்த நிலையில் சரண்யா வீட்டிற்கு சங்கீதா அடிக்கடி வருவது வழக்கம். சில தினங்களுக்கு முன்பு சரண்யா வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றுவிட்டார்.

அவர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னல் ஓரமாக வைப்பதை தெரிந்து கொண்ட சங்கீதா, நேற்று முன்தினம் சரண்யா வீட்டிற்கு வந்து சாவியை கொண்டு வீட்டை திறந்தார்.

பின்னர், வீட்டின் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டார்.

இதையடுத்து, வேலை முடிந்து வீட்டிற்கு சரண்யா வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த நகை, பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து சரண்யா புழல் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில்உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அதில், சரண்யா வீட்டிற்கு சங்கீதா வந்து திருடி விட்டு திரும்பி செல்வது பதிவாகியிருந்தது.

இதைத்தொடர்ந்து, போலீசார் சங்கீதாவிடம் துருவித்துருவி நடத்திய விசாரணையில், திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

புழல் போலீசார் அவரை கைது செய்து 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இது குறித்து சங்கீதாவிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் துணி, நகை, செல்போன் கடைகள் திறக்க அனுமதி இல்லை: கலெக்டர் ராமன் உத்தரவு
சேலம் மாவட்டத்தில் துணி, நகை, செல்போன், எலக்ட்ரிக்கல் போன்ற கடைகள் திறக்க அனுமதி இல்லை என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
2. ஜவுளி நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை- பணம் திருடிய 4 பேர் கைது
ஈரோட்டில் ஜவுளி நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை-பணத்தை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பவுன் நகை மீட்கப்பட்டது.
3. குடிமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் வங்கி செயலாளரிடம் நகை-பணம் திருட்டு - தம்பதி கைது
ஓடும் பஸ்சில் வங்கி செயலாளரிடம் நகை, பணம் திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
4. இண்டூர் அருகே கல்குவாரி காண்டிராக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு
இண்டூர் அருகே கல் குவாரி காண்டிராக்டர் வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
5. கோவை சிங்காநல்லூரில் டாக்டர் தம்பதி வீட்டில் நகை,பணம் திருடிய பெண் கைது
கோவை சிங்காநல்லூரில் உள்ள டாக்டர் தம்பதி வீட்டில் நகை, பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-