தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி


தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 3 March 2020 10:00 PM GMT (Updated: 4 March 2020 1:11 AM GMT)

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ேநற்று மழை ெபய்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அச்சன்புதூர், 

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தற்போது கோடை காலம் போன்று வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. ரோட்டில் அனல்காற்று வீசுவது போல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மழை பெய்யுமா? என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில் செங்கோட்டை அருகே உள்ள வடகரையில் நேற்று மாலை வெயில் திடீரென குறைந்தது. பின்னர் வானம் மேக மூட்டமாக மாறியது. 6 மணி அளவில் மழைத்தூறல் விழுந்தது. சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழையாக பெய்தது. சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த ஒரு மாத காலம் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இந்த மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். நெல் அறுவடை முடிந்துள்ள நிலையில் நேற்று பெய்த இந்த மழையானது தென்னை மரங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தென்னை விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்..

இதேபோல் ெசங்ேகாட்ை டயில் மாைல 5.45 மணி முதல் 6 மணி வரை மிதமான மழை ெபய்தது. பின்னர் மாைல 6.45 மணி முதல் இரவு 7.15 மணி வரை மழை ெபய்தது. இதனால் ெவப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் ெபாதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் ெதன்காசி, குற்றாலம், கடையநல்லூர், அச்சன்புதூர் ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

Next Story