ரூ.250 கோடியில் நடைபெறும் திருச்சி ரோடு மேம்பால பணிகளை ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டம்
ரூ.250 கோடியில் நடைபெறும் திருச்சி ரோடு மேம்பால பணிகளை ஒரு ஆண்டுக்குள் முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ரூ.250 கோடி மேம்பாலம்
கோவை- திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக ரூ.250 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இது, ரெயின்போ பகுதியில் இருந்து பங்கு சந்தை அலுவலகம் வரை 3.15 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.
இதற்காக 121 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட உள்ளன. 4 வழி பாதையாக மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
மேம்பால பணிகள் குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மார்ச் மாதம் முடிக்க திட்டம்
திருச்சி ரோடு சுங்கம் பகுதியில் கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பைபாஸ் சாலை பகுதியில் சில ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட வேண்டியது உள்ளது. கான்கிரீட் தூண்களுக்கு இடையே தளம் அமைக்கும் பணிகளும் நடைபெறுகிறது. மேம்பால பணிகள் முழுவதையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருச்சி சாலையில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கான்கிரீட் தூண்களின் மேல் மேல்பகுதியில் தளம் அமைக்கும் போது அசம்பாவிதம்ஏற்படாமல் தடுக்க போக்குவ ரத்து மாற்றம் செய்யப்படும்’ என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து நெரிசல்
மேம்பால பணி காரணமாக திருச்சி சாலையில் அடிக்கடி போக்குவ ரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story