துடியலூர் பகுதியில் திருட்டுபோன 237 பவுன் நகை உரியவர்களிடம் ஒப்படைப்பு; போலீசாருக்கு ஐ.ஜி.பெரியய்யா பாராட்டு
துடியலூர் பகுதியில் திருட்டுபோன 237 பவுன் நகையை உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு ஐ.ஜி.பெரியய்யா பாராட்டு தெரிவித்தார்.
237 பவுன் நகை மீட்பு
கோவை கவுண்டம்பாளையம் அருகே இடையர்பாளையம் அப்பாஸ் கார்டனில் உள்ள கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 137 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருட்டு போனது.. இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் துப்புதுலக்கி குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சென்று விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகள் 5 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 237 பவுன் தங்க நகை, கார் உள்ளிட்டவற்றை போலீசார் மீட்டனர்.
ஐ.ஜி.பெரியய்யா பாராட்டு
இதையடுத்து போலீசார், திருட்டு போன நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் திருட்டு வழக்குகளில் நகையை மீட்க சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் சன்மானம் வழங்கினார்.
மேலும் சிறப்பாக செயல்பட்டு 237 பவுன் நகையை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த துடியலூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிராங்ளின், முனுசாமி, செந்தில், மனோகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலஅலெக்சாண்டர் உள்பட 36 போலீசாரை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.பெரியய்யா நோில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி.கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story