சிவகிரியில் பாரம்பரிய உணவு விழிப்புணர்வு கண்காட்சி


சிவகிரியில்  பாரம்பரிய உணவு விழிப்புணர்வு கண்காட்சி
x
தினத்தந்தி 5 March 2020 3:45 AM IST (Updated: 4 March 2020 8:15 PM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே பாரம்பரிய உணவு பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி முகாம் நடைபெற்றது.

சிவகிரி, 

சிவகிரி அருகே காகம் கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தானிய உணவுகள், கீரையின் பயன்கள், பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் போன்ற பாரம்பரிய உணவு பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி, ஊராட்சி ஒன்றியத்தலைவர் கணபதி ஆகியோர் கலந்துகொண்டு பாரம்பரிய கண்காட்சியை பார்வையிட்டனர். மேலும் அவர்கள் இது போன்ற ஆரோக்கியமான உணவு வகைகளை மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இதில் ஆவின் இயக்குனர் அசோக், தொடக்க வேளாண்மை இயக்குனர்கள் தட்சிணாமூர்த்தி, செந்தில், காகம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story