தேனியில் பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நடைபயணம்
தேனி பங்களாமேட்டில் பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.
தேனி,
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் தேனி பங்களாமேட்டில் பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்கள், பெண்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடைபயணம் நடத்தப்பட்டது. இதில், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள், சமூகநலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள், மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பங்களாமேட்டில் தொடங்கிய நடைபயணம் பழைய பஸ் நிலையம், நேரு சிலை சிக்னல், பெரியகுளம் சாலை வழியாக பி.சி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story