திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
கொரடாச்சேரி,
18 வயதிற்கு உட்பட்ட அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. ஆனால் ஒரு சில குழந்தைகள் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் குழந்தை தொழிலாளர்களாக மாறி விடுகின்றனர்.
இதை தடுக்கும் வகையில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு முன்னர் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது.
தொழிலாளர் நலத்துறை
அதன்படி ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலத்துறை, சைல்டுலைன் ஆகிய துறைகள் இணைந்து திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இந்த பணி வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது.
பள்ளிக்கு வராத இடைநின்ற குழந்தைகளின் குடியிருப்புகளுக்கு சென்று இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு கண்டறியப்படும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரடாச்சேரி ஒன்றியம் திருவிடைவாசல், திட்டாணிமுட்டம், அத்திக்கடை பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கொரடாச்சேரி வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் பிரபு, ஆசிரியர் பயிற்றுனர்கள் காத்தமுத்து, கார்த்திகேயன், கலைச்செல்வன், கங்காதேவி, சண்முகப்பிரியா, துர்க்கா, மாவட்ட சைல்டு லைன் பணியாளர் ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வலங்கைமான்
வலங்கைமான் ஒன்றியம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் பற்றிய கணக்கெடுக்கும் பணி திருவாரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வராஜ் தலைமையில் தொடங்கியது.
முதல் கட்ட கணக்கெடுப்பில் கோவிந்தக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாக சிறப்பு மையங்களில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவி திட்ட அலுவலர் கலைவாணன் கூறுகையில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் என 10 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி செல்லாத குழந்தைகள் மட்டுமின்றி மாற்றுத்திறனாளி குழந்தைகளும் கண்டறியப்பட உள்ளனர் என்றார்.

Related Tags :
Next Story