குமரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு தொடங்கியது


குமரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 5 March 2020 3:45 AM IST (Updated: 5 March 2020 12:59 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 தேர்வு நேற்று தொடங்கியது. குமரி மாவட்டத்தில் 21,718 மாணவ- மாணவிகள் மொழிப்பாடத் தேர்வு எழுதினர்.

நாகர்கோவில், 

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 8¼ லட்சம் மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். குமரி மாவட்டத்திலும் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. இதற்காக மாவட்டம் முழுவதும் 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் நாளான நேற்று மொழிப்பாடத்தேர்வு நடந்தது. தமிழ் பாடத்தேர்வை பெரும்பாலான மாணவ- மாணவிகள் எழுதினர். சில மாணவ- மாணவிகள் மலையாளம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வுகளையும் எழுதினார்கள். 22,580 மாணவ- மாணவிகளில் 862 மாணவ- மாணவிகள் நேற்று தேர்வு எழுத வரவில்லை. இதனால் 21,718 பேர் மட்டுமே மொழிப்பாட தேர்வுகளை எழுதினர்.

தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க கல்வித்துறை இணை இயக்குனர் அமுதவல்லி தலைமையில் ஒரு பறக்கும் படையும், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் 8 பறக்கும்படைகளும், 48 சிறப்பு பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டிருந்தன. இவர்கள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

75 மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளும் மாவட்டம் முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் தனியாக தேர்வு எழுதினர். 

Next Story