நெல் கொள்முதல் நிலையத்தை கண்டித்து விவசாயிகள், மூட்டைகளில் அமர்ந்து உண்ணாவிரதம்


நெல் கொள்முதல் நிலையத்தை கண்டித்து விவசாயிகள், மூட்டைகளில் அமர்ந்து உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 4 March 2020 11:30 PM GMT (Updated: 4 March 2020 7:42 PM GMT)

நெல் கொள்முதல் நிலையத்தை கண்டித்து விவசாயிகள் மூட்டைகளில் அமர்ந்து உண்ணா விரதத்தில் ஈடுபட்ட னர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது.

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல், வியாபாரிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளையும், வெளியூர்களில் இருந்து வரும் நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்வதால், ஆத்திரம் அடைந்த உள்ளுர் விவசாயிகள் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் தாயுமானவன் தலைமையில் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளின் மேல் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்து வேதாரண்யம் தாசில்தார் சண்முகம், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி, நெல் கொள்முதல் அலுவலர் பரமசிவம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இன்று (நேற்று) முதல் 3 நாட்களுக்குள், 20 நாட்களுக்கு மேல் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story