மாவட்டம் முழுவதும் 130 மையங்களில் பிளஸ்-1 ேதர்வை 37,359 மாணவ, மாணவிகள் எழுதினர்


மாவட்டம் முழுவதும் 130 மையங்களில் பிளஸ்-1 ேதர்வை 37,359 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 4 March 2020 11:00 PM GMT (Updated: 4 March 2020 10:51 PM GMT)

சேலம் மாவட்டத்தில் நேற்று 130 மையங்களில் பிளஸ்-1 தேர்வு நடைபெற்றது. இதில் 37 ஆயிரத்து 359 மாணவ, மாணவிகள் எழுதினர். மையங்களை முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

சேலம்,

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-1 தே்ாவு தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 26-ந்தேதி வரை நடக்கிறது. இதில் நேற்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத்தேர்வுகள் நடைபெற்றன.

சேலம் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 683 மாணவர்கள், 20 ஆயிரத்து 561 மாணவிகள் என மொத்தம் 38 ஆயிரத்து 244 பேர் பிளஸ்-1 தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 527 மாணவர்கள், 358 மாணவிகள் என மொத்தம் 885 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அதன்படி 37 ஆயிரத்து 359 மாணவ, மாணவிகள் மட்டுமே ேநற்று தேர்வு எழுதினர். தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 130 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இறை வழிபாடு

தேர்வு எழுதுவதற்காக வீட்டில் இருந்து வருவதற்கு முன்பு மாணவ, மாணவிகள் பெற்றோரிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து அவரவர் வீட்டின் அருகே உள்ள கோவில்களில் சாமி கும்பிட்டனர். பலர் தேர்வு மையம் அருகே உள்ள கோவில்களில் சாமி கும்பிட்டனர்.

காலை 8.30 மணியில் இருந்தே அவரவர் மையங்களுக்கு வரத்தொடங்கினர். ஒரு சில பள்ளிகளில் தேர்வு தொடங்குவதற்கு முன்பு தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற இறை வழிபாடு நடத்தினர்.

பறக்கும் படை

தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க 320 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களின் நுழைவு வாயிலில் இது தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.

இதில் மாற்றுத்திறனாளிகள் சிலரும் ேதர்வு எழுதினர். சேலம் கோட்டை மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்ேவறு தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் கல்வித்துறை அதிகாரிகள் பல்வேறு தேர்வு மையங்களில் ஆய்வு நடத்தினர்.

குடிநீர் வசதி

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி கூறியதாவது:-

மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள தேர்வு மையங்களில் 135 முதன்மை கண்காணிப்பாளர்கள், 135 துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவ, மாணவிகளிடம் கேட்ட போது, தமிழ் தேர்வு எளிமையாக இருந்தது. பாடப்புத்தகத்தில் உள்ள கேள்விகள் தான் கேட்கப்பட்டு இருந்தன. பள்ளியில் அடிக்கடி மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டதால், பதற்றம் இல்லாமல் பொதுத்்தேர்வு எழுதினோம் என்று கூறினர்.

Next Story