கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார இயக்க ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார இயக்க ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
x
தினத்தந்தி 4 March 2020 11:52 PM GMT (Updated: 4 March 2020 11:52 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் சட்டசபை அருகே உள்ள நலவழி மற்றும் குடும்பநலத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி தேசிய சுகாதார இயக்கத்தில் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் சட்டசபை அருகே உள்ள நலவழி மற்றும் குடும்பநலத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தாததால் நேற்று 3-வது நாளாக தொடர் போராட்டம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு சங்க நிர்வாகி வெற்றிவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பிரகதீஸ்வரன், வினோத், அருள்ராஜ், சுதா, தனலட்சுமி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் நள்ளிரவுக்கு பிறகும் தொடர்ந்து நடந்தது.

Next Story