தொழிற்பழகுனர் சேர்க்கை முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு ஆணை; கலெக்டர் ‌ஷில்பா வழங்கினார்


தொழிற்பழகுனராக தேர்வு பெற்றவருக்கு பணி ஆணையை கலெக்டர் ‌ஷில்பா வழங்கிய போது எடுத்த படம்.
x
தொழிற்பழகுனராக தேர்வு பெற்றவருக்கு பணி ஆணையை கலெக்டர் ‌ஷில்பா வழங்கிய போது எடுத்த படம்.
தினத்தந்தி 5 March 2020 4:22 PM IST (Updated: 5 March 2020 4:22 PM IST)
t-max-icont-min-icon

பேட்டையில் நடந்த தொழிற்பழகுனர் சேர்க்கை முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா பணி ஆணையை வழங்கினார்.

தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்
நெல்லை பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு தேசிய தொழிற்பழகுனர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் நெல்லை மண்டல அளவில் தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது.

தொடக்க நிகழ்ச்சிக்கு பேட்டை அரசு தொழிற்பயிற்சி இயக்குனர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். முகாம் காலை 10 மணிக்கு தொடங்கியது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர்.

500-க்கும் மேற்பட்டவர்கள்
முகாமில், சுமார் 65 முன்னணி நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் நிறுவனத்துக்கு தேவையான தொழிற்பழகுனரை தேர்வு செய்தனர். முகாமில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஓர் ஆண்டு தொழிற்பழகுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகையாக ரூ.7 ஆயிரம் முதல் வழங்கப்படுகிறது.

தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா கலந்து கொண்டு பணி ஆணை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் பழனி, கன்னியாகுமரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ஜார்ஜ் பிராங்களின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story