தென்காசி மாவட்டத்தில், நாளை அனைவருக்கும் வீடு திட்ட சிறப்பு முகாம் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தகவல்


தென்காசி மாவட்டத்தில், நாளை அனைவருக்கும் வீடு திட்ட சிறப்பு முகாம் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தகவல்
x
தினத்தந்தி 6 March 2020 4:30 AM IST (Updated: 5 March 2020 5:31 PM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) அனைவருக்கும் வீடு திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.

தென்காசி, 

தென்காசி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) அனைவருக்கும் வீடு திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது என மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் வீடு திட்டம் 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், நெல்லை கோட்டம் மூலமாக பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் (நகர்ப்புறம்) மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பயனாளிகள் தாங்களாகவே காங்கிரீட் வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் (300 சதுரஅடி பரப்பளவில் காங்கிரீட் கூரை வீடு) குறைந்த வருவாய் பிரிவின் கீழ் வாழும் தகுதி வாய்ந்த குடும்பங்கள் பயன் பெறும் வகையில் பயனாளிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியமான ரூ.2.10 லட்சத்தை 4 தவணைகளில் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேற்கண்ட திட்டத்தில் பயன் பெறும் வகையில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் விடுபட்ட பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு நாளை (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

எனவே பொதுமக்கள் மேற்கண்ட திட்டத்தில் பயன் பெற ஆதார் அட்டையாள அட்டை நகல் (கணவன்– மனைவி), குடும்ப அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், நில உரிமை ஆவணம் அல்லது பட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் தவறாமல் கலந்துகொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story