நெல்லையில் காதலியை கர்ப்பிணியாக்கிவிட்டு ஏமாற்றிய வாலிபர் கைது தூத்துக்குடியில் சிக்கினார்


நெல்லையில் காதலியை கர்ப்பிணியாக்கிவிட்டு ஏமாற்றிய வாலிபர் கைது தூத்துக்குடியில் சிக்கினார்
x
தினத்தந்தி 5 March 2020 10:00 PM GMT (Updated: 2020-03-05T18:54:06+05:30)

நெல்லையில் காதலியை கர்ப்பிணியாக்கி விட்டு, வேறு ஒரு பெண்ணை கைப்பிடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லையில் காதலியை கர்ப்பிணியாக்கி விட்டு, வேறு ஒரு பெண்ணை கைப்பிடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காதலி கர்ப்பம் 

பாளையங்கோட்டை சமாதானபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் முருகதாஸ். இவருடைய மகன் ஜெயக்குமார் (வயது 28). தந்தை, மகனும் சேர்ந்து பாளையங்கோட்டை மார்க்கெட்டில் மரச்சாமான்கள் கடை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமாருக்கும், அதே வயதுள்ள ஒரு இளம் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.

2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அந்த பெண் வீட்டார், ஜெயக்குமாரை சந்தித்து பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

வாலிபர் கைது 

இந்த நிலையில் ஜெயக்குமாருக்கு தூத்துக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் பேசி முடித்தனர். அவர்களுக்கு நேற்று திருமணம் நடக்க இருந்தது. இதை அறிந்த இளம்பெண் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் தூத்துக்குடிக்கு சென்று அங்கு புதுமாப்பிள்ளையாக இருந்த ஜெயக்குமாரை கைது செய்தனர். இதனால் அங்கு நடக்க இருந்த திருமணம் நின்றது.

Next Story