பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணி தொடக்கம்
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணி நேற்று தொடங்கியது.
நெல்லை,
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணி நேற்று தொடங்கியது.
புதிய தேர்
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் 1,000 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலின் தேர் சிதிலமடைந்து விட்டது. இதையொட்டி கடந்த 10 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழாவின் போது தேர் ஓடவில்லை. இதையடுத்து பக்தர்கள் புதிய தேர் செய்ய முடிவு செய்தனர்.
இதற்கான தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக யாக பூஜைகள் மற்றும் பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து தேர் செய்வதற்கு உரிய தேக்குமர கட்டை பூஜிக்கப்பட்டு வாஸ்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து தேர் செய்வதற்கு கட்டை செதுக்கி திருப்பணியை நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
36 அடி உயரம்
ரூ.55 லட்சம் செலவில் இந்த தேர் செய்யப்படுகிறது. 36 அடி உயரமும் 5 அடி உயர சக்கரமும் 14 அடி அகலமும் கொண்டதாக இந்த தேர் செய்யப்படுகிறது. 35 டன் எடை கொண்ட இந்த தேரில் 5 அடுக்கு அலங்காரம் செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்குள் தேர் செய்யும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story