பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உலக திறனாய்வு திட்ட தடகள போட்டி
பாளையங்கோட்டையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உலக திறனாய்வு திட்ட தடகள போட்டிகள் நேற்று நடந்தது.
நெல்லை,
பாளையங்கோட்டையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உலக திறனாய்வு திட்ட தடகள போட்டிகள் நேற்று நடந்தது.
தடகள போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை பிரிவு சார்பில் உலக திறனாய்வு திட்டத்தின் கீழ் நெல்லை கல்வி மாவட்ட பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் நடந்தது.
இந்த போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் நெல்லை கல்வி மாவட்டம் முழுவதும் இருந்து 36 பள்ளிகளை சேர்ந்த 6, 7, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் 756 பேர் கலந்து கொண்டனர்.
குண்டு எறிதல்
அவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரமேஷ் ராஜா மற்றும் பயிற்சியாளர்கள், பல்வேறு விளையாட்டு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story