திசையன்விளை கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து 5 பவுன் நகை ‘அபேஸ்’ 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
திசையன்விளை கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து 5 பவுன் நகையை அபேஸ் செய்த 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திசையன்விளை,
திசையன்விளை கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து 5 பவுன் நகையை அபேஸ் செய்த 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாடிக்கையாளர் போல்...
திசையன்விளை மெயின் பஜாரில் நகைக்கடை நடத்தி வருபவர் திருவடிமுத்து (வயது 65). இவரது கடைக்கு நேற்று காலை 35, 50 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள், 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வாடிக்கையாளர் போல் வந்தனர்.
பெண்கள் இருவரும் தாங்கள் தங்க நகைகள் வாங்க வந்திருப்பதாகவும், அந்த நகைகளை காண்பிக்கும்படியும் கூறினர். உடனே திருவடிமுத்து தங்க நகைகளை எடுத்துக் கொடுத்தார். அந்த நகைகளை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
5 பவுன் நகை ‘அபேஸ்’
அப்போது அந்த ஆண் தனக்கு வெள்ளிக்கொடி காண்பிக்கும்படி கூறினார். உடனே திருவடிமுத்து அவருக்கு அவற்றை எடுத்துக் காண்பித்தார். அந்த நேரத்தில், பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த 5 பவுன் நகையை அந்த பெண்கள் நைசாக ‘அபேஸ்’ செய்தனர். பின்னர் அதை தங்களுடன் வந்த ஆண் நபரிடம் கொடுத்தனர். அவர் அதை மறைத்து வைத்துக் கொண்டார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
அதன்பிறகு திருவடிமுத்து நகைகளை சரிபார்த்தபோது, 5 பவுன் நகை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
கண்காணிப்பு கேமராவில்...
அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் 2 பெண்கள் உள்பட 3 பேரும் நகையை ‘அபேஸ்’ செய்தது பதிவாகி இருந்தது. இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து 5 பவுன் நகையை 3 பேர் ‘அபேஸ்’ செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story