10 தாலுகாக்களில் அம்மா திட்ட முகாம் இன்று நடக்கிறது


10 தாலுகாக்களில் அம்மா திட்ட முகாம்   இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 5 March 2020 10:15 PM GMT (Updated: 2020-03-05T21:30:32+05:30)

ஈரோடு மாவட்டத்தில் 10 தாலுகாக்களில் அம்மா திட்ட முகாம் இன்று நடக்கிறது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில் அம்மா திட்ட முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதன்படி ஈரோடு தாலுகாவில் பேரோடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், மொடக்குறிச்சி தாலுகாவில் நஞ்சைஊத்துக்குளி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், கொடுமுடி தாலுகாவில் கொடுமுடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், பெருந்துறை தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், பவானி தாலுகாவில் தொட்டிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

மேலும் அந்தியூர் தாலுகாவில் வெள்ளிதிருப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், கோபி தாலுகாவில் கொங்கர்பாளையம் பழைய அரசு உயர்நிலை பள்ளிக்கூடத்திலும், சத்தி தாலுகாவில் நல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், நம்பியூர் தாலுகாவில் லாகம்பாளையம் இ-சேவை மைய கட்டிடத்திலும், தாளவாடி தாலுகாவில் கேர்மாளம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் அம்மா திட்ட முகாம் நடக்கிறது.

மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Next Story