உத்தவ் தாக்கரே நாளை அயோத்தி பயணம்; சிறப்பு ரெயிலில் தொண்டர்கள் புறப்பட்டனர்


உத்தவ் தாக்கரே நாளை அயோத்தி பயணம்; சிறப்பு ரெயிலில் தொண்டர்கள் புறப்பட்டனர்
x
தினத்தந்தி 6 March 2020 4:45 AM IST (Updated: 6 March 2020 12:18 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நாளை அயோத்தி சென்று ராமரை வழிபடுகிறார். இதையொட்டி சிவசேனா தொண்டர்கள் நேற்று சிறப்பு ரெயிலில் புறப்பட்டனர்.

மும்பை,

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நாளை(சனிக்கிழமை) அயோத்தி செல்கிறார். சிவசேனா தலைமையிலான அரசின் 100 நாட்கள் ஆட்சியை தொடர்ந்து, அயோத்தி சென்று ராமரை வழிபட இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் சிவசேனா தொண்டர்கள் அயோத்தி செல்ல வசதியாக சிறப்பு ரெயில் நேற்று மும்பையில் இருந்து தானே வழியாக உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டு சென்றது. நேற்று பகல் 2 மணியளவில் எல்.டி.டி.யில் இருந்து சிறப்பு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் இன்று அயோத்தி சென்றடைகிறது.

இதே ரெயில் மறுமார்க்கத்தில் நாளை இரவு 11.20 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு 9-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு எல்.டி.டி. வந்தடைகிறது.

முன்னதாக நேற்று மும்பையில் இருந்து அயோத்தி சென்ற சிறப்பு ரெயிலில் திரளான சிவசேனா தொண்டர்கள் சென்றனர். சிவசேனாவினர் அயோத்தி சென்று திரும்பும் சிறப்பு ரெயில் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.


Next Story