இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பேட்டி


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 6 March 2020 6:00 AM IST (Updated: 6 March 2020 12:32 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வின் குமார் சவுபே கூறினார்.

திருச்சி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தீவிர பரிசோதனை

இந்த நோயின் தாக்கம் குறித்து ஓரிரு நாட்களில் மந்திரி சபை கூடி விவாதிக்கும். அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story