மாவட்ட செய்திகள்

மாநிலங்களவை எம்.பி. தேர்தல்; சரத்பவார் 11-ந் தேதி வேட்பு மனு + "||" + Rajyasabha MPs Election; Sarath Pawar filed for nomination on 11th

மாநிலங்களவை எம்.பி. தேர்தல்; சரத்பவார் 11-ந் தேதி வேட்பு மனு

மாநிலங்களவை எம்.பி. தேர்தல்; சரத்பவார் 11-ந் தேதி வேட்பு மனு
மராட்டியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.
மும்பை,

புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது. இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 13-ந் தேதி கடைசி நாளாகும்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் பவுசினா கான் ஆகியோர் வருகிற 11-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. சரத்பவார், அஜித்பவாருடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது. மார்ச் 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் சரத்பவார், அஜித்பவாருடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.
2. எல்கர் பரிஷத் வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றம் ; உத்தவ் தாக்ரே மீது சரத்பவார் அதிருப்தி
எல்கர் பரிஷத் வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியதற்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு மீது சரத்பவார் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
3. மத்திய மந்திரி அனுராக் சிங்குடன் சரத்பவார் சந்திப்பு; பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து ஆலோசனை
முறைகேடு புகாரில் சிக்கிய பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து டெல்லியில் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் சிங் தாக்குருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆலோசனை நடத்தினார்.
4. சரத்பவாரை ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் -சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்
சரத்பவாரை ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.
5. குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களை புறக்கணித்தது ஏன்? மத்திய அரசுக்கு, சரத்பவார் கேள்வி
குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களை புறக்கணித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு சரத்பவார் கேள்வி எழுப்பி உள்ளார்.