நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை விளையாட்டு விழாவுக்கு பணம் கொடுக்காததால் விபரீத முடிவு
நித்திரவிளை அருகே விளையாட்டு விழாவுக்கு பணம் கொடுக்காததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு.
நித்திரவிளை,
நித்திரவிளை அருகே பூத்துறை கூட்டபனைவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகள் வனஜா (வயது 18). இவர் தூத்தூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். வனஜா பெற்றோரிடம் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெறுவதாகவும், அதற்கு பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். பெற்றோர் தற்போது பணம் இல்லை என்றும், பின்னர் தரலாம் என கூறியுள்ளனர். இதையடுத்து வனஜா மனமுடைந்து காணப்பட்டார்.
சம்பவத்்தன்று வீட்டில் வனஜாவும் அவரது தாயாரும் இருந்தனர். அப்போது வனஜா வீட்டின் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை.
இதனால், சந்தேகம் அடைந்த தாயார் ஜன்னல் வழியாக பார்த்த போது வனஜா மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று வனஜாவை மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார், பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story