திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு


திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
x
தினத்தந்தி 6 March 2020 10:15 PM GMT (Updated: 6 March 2020 4:49 PM GMT)

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பெருநிறுவன உறுப்பினர்களுக்காக ஒரு நாள் கருத்தரங்கு நேற்று நடந்தது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் இந்திய பொறியாளர்களின் அமைப்பு மற்றும் தூத்துக்குடி உள்ளூர் மையம் சார்பில், ‘ரசாயன ஆலைகளின் பாதுகாப்பான செயல்பாட்டிற்காக கையாளும் யுக்திகள்’ என்ற தலைப்பில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெருநிறுவன உறுப்பினர்களுக்காக ஒரு நாள் கருத்தரங்கு நேற்று நடந்தது. காலையில் நடந்த தொடக்க விழாவில் தூத்துக்குடி உள்ளூர் மையத்தின் முன்னாள் தலைவரான அரிபு சுல்தான் வரவேற்று பேசினார். பொறியாளர்கள் அமைப்பு தலைவர் மரிய மைக்கேல்ராஜ் கருத்தரங்கின் மையக்கருத்து பற்றி பேசினார். தூத்துக்குடி அனல்மின் நிலைய முன்னாள் தலைமை பொறியாளர் செல்வராஜ் தொடக்க உரையாற்றினார்.

பின்னர் மதியம் ‘யுனிசெக்’ இந்தியா நிறுவனத்தின் சார்பில், ‘சிறிய செயற்கைக்கோள்கள்-பெரிய பயன்பாடுகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசினார். சிறிய செயற்கைக்கோள்களின் பயன்பாடுகள் குறித்து ‘யுனிசெக்’ இந்தியா நிறுவன பொதுச்செயலாளரும், என்.எச்.சி.இ. அமைப்பு தலைவருமான கோபாலகிருஷ்ணன் விளக்கி கூறினார்.

இந்த கருத்தரங்கு மாணவர்கள், பேராசிரியர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தி கொள்ள உறுதுணையாக இருந்தது. ஐ.இ.ஐ. நூற்றாண்டின் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான இளம் ஆராய்ச்சி பொறியாளர் குழு விருதினை நியூ ஹரிசன் ஸ்டூடன்ட் சேட்டிலைட் குழுவுக்கு வழங்கப்பட்டது. கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியர் சிவனணைந்த பெருமாள் நன்றி கூறினார்.

Next Story