மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழா கூட்டத்தில் 4 பேரிடம் நகை பறித்த 3 பெண்கள் கைது + "||" + At the temple festival meeting 4 jeweled people 3 women arrested

கோவில் திருவிழா கூட்டத்தில் 4 பேரிடம் நகை பறித்த 3 பெண்கள் கைது

கோவில் திருவிழா கூட்டத்தில் 4 பேரிடம் நகை பறித்த 3 பெண்கள் கைது
கோவில் திருவிழா கூட்டத்தில் 4 பேரிடம் நகை பறித்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை,

கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கேரள மாநிலம் மலம்புழாவை சேர்ந்த ராஜம்மாள் (வயது 72) என்ற மூதாட்டி உள்பட 4 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அரங்கேறியது.

இது குறித்த புகாரின் பேரில் கோவை பெரியகடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் 3 பெண்களை சந்தேகத் தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள், சென்னை திருவான்மியூரை சேர்ந்த சின்னத்தம்பி என்பவருடைய மனைவி செல்வி (36), பராசக்தி என்ற ஆதிபராசக்தி (36), இந்துமதி (27) என்பதும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து 4 பெண்களிடம் 12 பவுன் நகையை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. மாணவியை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம், நகை பறிப்பு; மாணவர் கைது
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயதான 11-ம் வகுப்பு மாணவர். இவர் அந்த பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியிடம் நட்புடன் பழகி வந்தார்.