மாவட்ட செய்திகள்

திருச்செந்தூரில் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + The suicide of the young men who married for love in Tiruchendur

திருச்செந்தூரில் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்செந்தூரில் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்செந்தூரில் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் காந்திபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவருடைய மகன் புஷ்பராஜ் (வயது 26). கூலி தொழிலாளி. இவர், அதே ஊரைச் சேர்ந்த வனஜாவை (23) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

புஷ்பராஜிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு, சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

கடந்த மாதம் புஷ்பராஜ் தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்து விட்டு, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவரை காப்பாற்றினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புஷ்பராஜ் திடீரென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தற்கொலை செய்த புஷ்பராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்செந்தூரில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் கடற்கரையில்தான் நடைபெறும்: மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்
திருச்செந்தூரில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் கடற்கரையில்தான் நடைபெறும் என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
2. திருச்செந்தூர்-விளாத்திகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர், விளாத்திகுளத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. நடிகையை கற்பழித்து கொன்று விடுவதாக மிரட்டல் வாலிபர் கைது
மராத்தி பட நடிகையை கற்பழித்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. திருப்போரூர் அருகே, வாலிபர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை
திருப்போரூர் அருகே தனது அண்ணனின் நண்பரை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.