கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை; கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது


கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை; கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 7 March 2020 5:56 AM IST (Updated: 7 March 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது.

சேலம், 

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் ராமன் பேசியதாவது:-

உலகளவில் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரசுக்கான 12 படுக்கைகள் கொண்ட தனி சிறப்பு வார்டு மற்றும் தனிமை வார்டும் தயாராக உள்ளது.

மேலும் மருத்துவக்குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்பு உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் மற்றும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story